காபூல்:திபெத் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய நில அதிர்வு மையத்தின் அறிவிப்பின்படி, திபெத் பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் பதிவாகின. நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



