லண்டன்: வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி (2026) அரிதான முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழவுள்ளது. எனினும், இந்த விண்வெளி நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எங்கு தென்படும்?: இந்த முழு சூரிய கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ரஷ்யாவின் வடபகுதி மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் தெளிவாகக் காணப்படும்.
பகுதி நேர கிரகணம்: ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க மண்டலங்களில் இது பகுதி நேரச் சூரிய கிரகணமாக (Partial Solar Eclipse) தென்படும்.
இந்தியாவில் ஏன் பார்க்க முடியாது?: இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 9:45 மணி முதல் ஆகஸ்ட் 13 அதிகாலை 2:15 மணி வரை இந்த கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் அந்த நேரத்தில் இரவு நேரம் என்பதால், இதனை நேரில் காண முடியாது.
சுதாக் காலம் (Sutak Kaal): இந்தியாவில் இந்த கிரகணம் தென்படாது என்பதால், சாஸ்திர சம்பிரதாயப் படியான 'சுதாக் காலம்' விதிகள் மற்றும் கோவில் மூடல்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வராது.
இந்தியாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் நாசா (NASA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) இணையதள நேரலைகள் மூலம் இந்த அரிய நிகழ்வைக் காணலாம்.



