தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "உங்க விஜய் நான் வரேன்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணம் டிசம்பர் 20-ம் தேதியுடன் நிறைவடையும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்...!
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பின் காரணமாக, பயணத் திட்டத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை, தனது பயணத்தைத் தொடர விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நீட்டிப்பு, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


