தமிழ்நாடு

தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்...!

top-news

தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன், தனது 56வது வயதில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த பீலா வெங்கடேசன், ஒரு மருத்துவர் ஆவார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றியபோது, அவரது தெளிவான பேச்சு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மறைந்த முன்னாள் டிஜிபி வெங்கடேசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் ஆகியோரின் மகளான இவரது மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.