போதைப்பொருள் இல்லாத தமிழகம்” என்ற நோக்கத்தை முன்னிறுத்தி, ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தின் முதல் மாநில அளவிலான விழிப்புணர்வு மாநாடு நாளை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்து, இளைஞர்களை விழிப்புணர்வுடன் சமூகப் பொறுப்புடையவர்களாக உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டில் போதைப்பொருள் தடுப்பு, இளைஞர்களின் மனநலம், கல்வி, சமூகப் பொறுப்பு, குடும்ப விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு உரைகள் இடம்பெற உள்ளன. பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி சமூக மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக வேண்டும் என்பதற்கான உறுதிமொழியும் மாநாட்டில் எடுக்கப்படவுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த முதல் மாநாடு, சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.



