தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, முதல்வர் விஜய் நாளை பெரம்பூர் தொகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெரம்பூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சாலைகள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பெரம்பூர் பகுதியில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வடசென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பெரம்பூருக்கு விஜய் முதன்முறையாக வருவது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



