ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தாலிபான்களுக்கு தடை விதிக்கும் குழுவிற்கும், தீவிரவாத எதிர்ப்பு குழுவிற்கும் பாகிஸ்தான் தலைமை வகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் குற்றச்சாட்டு
விவாதத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பேசியதாவது:
"பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் புகலிடமாக செயல்படும் பாகிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் தலைமை ஏற்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உள்நோக்கத்துடன் செயல்படும் உறுப்பினர்கள் இத்தகைய குழுக்களில் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்களும் அவற்றின் தலைவர்களும் தேர்வு செய்யப்படும் முறைகள் ரகசியமாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் ஹரிஷ் கூறினார்.


