கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மொத்தம் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (அக்டோபர் 3, 2025) 7 வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
நீதிபதிகள் அமர்வு விசாரிப்பு:
நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த 7 பொதுநல வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க: அரபிக்கடலில் உருவாகிறது புயல்... 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


