தமிழ்நாடு

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு திடீர் கைது.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

top-news

'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் நகரைத் தொடர்ந்து கரூரில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி,


தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்,

இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மற்றும்

கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன்

ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்குப்பதிவு சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.