"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் முதல்வர் உணர்ச்சிப்பூர்வமான ஊக்க உரையை வழங்கினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைத் தொடர்வதில் இருந்து விலகக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் படிப்புக்குத் துணையாகவும், ஆதரவாகவும் எப்போதும் தமிழக அரசு இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக,
"தொடர்ந்து படியுங்கள்... உங்கள் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்"
என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: பென்ட்லி காரில் முகத்தை மறைத்துக் கொண்டு பயணிக்கும் உங்களுக்கு ஏழைகளின் துயரம் எப்படித் தெரியும்?" ஈபிஎஸ்-ஐ விமர்சித்த செல்வப்பெருந்தகை!
இந்த விழாவில், "புதுமைப் பெண்" மற்றும் "தமிழ்ப்புதல்வன்" போன்ற உயர்கல்விக்கான நிதி உதவித் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும், அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களின் சாதனைகள் குறித்தும் முதல்வர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


