அரசியல்

"பென்ட்லி காரில் முகத்தை மறைத்துக் கொண்டு பயணிக்கும் உங்களுக்கு ஏழைகளின் துயரம் எப்படித் தெரியும்?" ஈபிஎஸ்-ஐ விமர்சித்த செல்வப்பெருந்தகை!

top-news

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.

டெல்லியில் விலை உயர்ந்த பென்ட்லி (Bentley) சொகுசு காரில் முகத்தை மறைத்துக் கொண்டு பழனிசாமி பயணிப்பதைக் குறிப்பிட்டு, "அப்படி சொகுசாகச் செல்லும் உங்களுக்கு ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் எப்படித் தெரியும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ராமதாஸுக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏக்கள்.. நீக்கப்பட்டார் ஜி.கே.மணி!

சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இந்தக் கருத்தைப் பேசியுள்ளார். ஏழைகளின் கஷ்டங்களைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று சுட்டிக்காட்டும் விதமாக அவரது இந்தப் பேச்சு அமைந்துள்ளது.