சென்னை: தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரி, அதன் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பண்டிகைக் காலப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான காரணங்களை காவல்துறை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கெனவே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட காரணங்களையே மீண்டும் முன்வைத்து அனுமதி மறுப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பேரணிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவற்றுக்கான நேரம், வழித்தடம் மற்றும் பொதுக்கூட்ட இடங்களை அக்டோபர் 19-க்குள் இறுதி செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியது.
மேலும், நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அமைப்பினர் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது



