தமிழ்நாடு

தீபாவளிக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு? நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

top-news

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மளிகை தொகுப்பில் என்னென்ன பொருட்கள்?

ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்குத் தேவையான நிதி, பயனாளிகளின் எண்ணிக்கை, கொள்முதல் செலவு மற்றும் விநியோக நடைமுறைகள் தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் விவரங்களைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இலவச மளிகை தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள், வழங்கப்படும் தேதி மற்றும் பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அரசின் இறுதி முடிவுக்குப் பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.