தமிழ்நாடு

கோவையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட ரோடு ஷோ: வழிநெடுகிலும் திரண்ட மக்கள், மலர் தூவி உற்சாக வரவேற்பு!

top-news

கோவை: பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று (அக்.16) காலை கோவை வந்தடைந்த விஜய்யை விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக காந்திபுரம் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.

மேளதாளம் முழங்க வரவேற்பு!

முதலமைச்சரைக் காண சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்தனர். மேளதாளங்கள் முழங்கவும், மலர்களைத் தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்றனர். விஜய்யும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்பதால் தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகம் காணப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

விஜய்யின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

ரோடு ஷோவைத் தொடர்ந்து, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.