தமிழ்நாடு

கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகம் திறப்பு: நவீன நூலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த முதல்வர் விஜய்!

top-news

கோவை: கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் விஜய், அவிநாசி சாலை வழியாக ரோடுஷோ மேற்கொண்டு விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றார். தொடர்ந்து, ரிப்பன் வெட்டி பிரம்மாண்ட நூலகத்தைத் திறந்து வைத்தார். 

பெரியார் அறிவுலகத்தின் சிறப்பம்சங்கள்

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம், சிறுவர் நூலகம், போட்டித் தேர்வு பயிற்சி மையம், அறிவியல் மையம், கோளரங்கம் மற்றும் 350 பேர் அமரக்கூடிய அரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நூலகம், தமிழ் மற்றும் ஆங்கில நூல் பிரிவுகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவுத் தேடலுக்கு இந்த மையம் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.