தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்....
விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தை முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்...
பயணத்தின் ஒரு பகுதியாக ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்தார். அவரது வருகை அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில், தமிழகத்தின் ஆன்மிக மற்றும் பண்பாட்டுச் சிறப்பை எடுத்துரைக்கும் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பிரதமரின் கோவில் தரிசனம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன.



