தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு மெட்ரோ குட்நியூஸ்! பூவிருந்தவல்லி - வடபழனி ரயில் சேவை இன்று மாலை 4 மணிக்குத் தொடக்கம்!

top-news

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான புதிய வழித்தடத்தில் இன்று (அக்டோபர் 11) மாலை 4 மணி முதல் பொதுமக்களுக்கான ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில், பூவிருந்தவல்லி - வடபழனி வழித்தடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சுமார் 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் மெட்ரோ ரயில் இணைப்பைப் பெறுகின்றன.

பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள இந்த வழித்தடத்தில், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பயணிக்கலாம்.

நாளை (அக்டோபர் 12) முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்தின் மூலம் பூவிருந்தவல்லி, போரூர் மற்றும் வடபழனி இடையே பயணிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.