சென்னை: வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அவரது உயரிய சிந்தனைகள் மற்றும் மனிதநேயக் கொள்கைகளை நினைவுகூர்ந்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், பசித்த உயிர்களுக்கு உணவளிப்பதே இறைப்பணி என்றும், சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம் என்றும் வள்ளலார் வலியுறுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலாரின் கொள்கைகள் மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



