சென்னை: வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அவரது கொள்கைகள் மற்றும் கருத்துகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் பிறந்தநாளை “தனிப்பெரும் கருணை நாள்” எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சாதி, சமயம், சடங்குகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதியவர் வள்ளலார் என தெரிவித்துள்ளார்.
மேலும், வள்ளலாரின் உயரிய கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அனைத்துலக வள்ளலார் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல, அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவம் மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகள் மக்கள் மனங்களில் சுடர்விட்டு எரிய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



