சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறி, தற்போது தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என இபிஎஸ் கேட்டுக்கொண்டார்.
அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் தற்போது மீண்டும் வாக்கு கேட்பதாக அவர் விமர்சித்தார். மேலும், குறுக்கு வழிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கும், தாராபுரம் தொகுதியில் பானுமதிக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
அக்.6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக மற்றும் திமுக வேட்பாளர்களை தோற்கடித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



