தமிழ்நாடு

“தூயசக்தி என தம்பட்டம் அடித்த ரீல் 4 மாதங்களில் அறுந்துவிட்டதே” - விஜய்யை சாடிய ஸ்டாலின்

top-news

சென்னை: தமிழக வெற்றிக் கழக ஆட்சி குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “தூயசக்தி என தம்பட்டம் அடித்த உங்களது ரீல் நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே” என முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ள ஸ்டாலின், விஜய் அரசுக்கு எதிராக நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்படுவது குறித்தும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.