தமிழ்நாடு

தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோட் ஷோ: வழிநெடுகிலும் திரண்ட மக்கள், தவெகவினர் உற்சாகம்

top-news

தாராபுரம்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக, தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரம்மாண்ட ரோட் ஷோவில் ஈடுபட்டார்.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்த விஜய், மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இறங்கினார். தொடர்ந்து பிரசார வாகனத்தில் சத்யபாமாவுடன் பயணித்து, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சுமார் 30 கிலோமீட்டருக்கும் மேல் நடைபெற்ற இந்த ரோட் ஷோவின் போது, விஜய்யை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இதனால் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேலும் பரபரப்படைந்தது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் விஜய்யின் இந்த இறுதிக்கட்ட பிரசாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.