சென்னை: பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்களைத் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தீர்ப்பின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் திரும்பியுள்ளது.
வழக்கு நீண்ட காலமாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



