மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரிடம் இருந்து இதுவரை 893 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வர முடியாத தகுதியான வாக்காளர்களுக்காக வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மதுராந்தகம் தொகுதியில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்ற 931 வாக்காளர்களிடம் வாக்குகள் பெறப்பட்டன. இதில் 451 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 480 பேர் மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர்.
மொத்தம் 931 பேர் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றிருந்த நிலையில், 893 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 38 பேர் வாக்களிக்காத நிலையில், அவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது



