மதுரை: தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (செப். 28) தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை முதல்வர் விஜய் அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 2026-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளை கௌரவிப்பதுடன், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதும், தாய்-சேய் நலனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழர் பண்பாட்டில் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.



