தமிழ்நாடு

ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

top-news

மதுரை: மதுரையில் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று (செப். 28) திறந்து வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், அங்கிருந்து காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு சென்றார். அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கட்டிடத்தின் பழமை மாறாமல் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நவீன டிஜிட்டல் திரைகள், தொடுதிரை வசதிகள் மற்றும் புதிய காட்சியமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் காந்தியின் தமிழகப் பயணம் உள்ளிட்ட தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், காந்தி தொடர்பான காணொலியையும் முதல்வர் பார்வையிட்டார்.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் காந்தி நினைவு அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது