சென்னை: ஜெம் வீரமணி வழக்கில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மனு அளித்துள்ளார்.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் மற்றும் இரு அமைச்சர்கள் திமுக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக டி.ஆர்.பாலு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அவர்களிடம் இருந்தால், அவற்றை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணை தொடர்பான ரகசிய தகவல்கள் அல்லது ஆவணங்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதன் மூலம், வழக்கில் உள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களை முழுமையாகச் சேகரிக்க முடியும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மற்றும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரையும் சம்மன் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே மனுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.



