தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் தரிசனம்: நாளை மறுநாள் மதுரை வருகை

top-news

தமிழக முதல்வர் விஜய், நாளை மறுநாள் (செப்டம்பர் 28) மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரான பிறகு விஜய் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையம் முதல் அவர் செல்லும் முக்கிய வழித்தடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.