சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதுடன், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பான மருத்துவமனை அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.



