சென்னை: பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பேச்சுக் கலையை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சென்றதில் சாலமன் பாப்பையா முக்கிய பங்கு வகித்ததாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பட்டிமன்றங்கள் மூலம் தமிழ் இலக்கிய கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்காகவும், தமிழ் பேச்சுக் கலையின் வளர்ச்சிக்காகவும் சாலமன் பாப்பையா ஆற்றிய பணிகள் அவரது மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து நினைவுகூரப்படும் என இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



