தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரத்தில் பழைய முகங்களே மீண்டும் களம்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

top-news

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இரு தொகுதிகளிலும் ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மரகதம் குமாரவேல் மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றிருந்தனர். பின்னர் இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தற்போது காலியாகியுள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த தேர்தலில் மரகதம் குமாரவேல் வெற்றி பெற்ற நிலையில், தாராபுரத்திலும் சத்தியபாமா வெற்றி பெற்றிருந்தார். இருவருக்கும் அந்தந்த தொகுதிகளில் ஏற்கெனவே உள்ள அரசியல் அறிமுகம் மற்றும் தேர்தல் அனுபவம் தவெகவுக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 9 முதல் 16-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது