தமிழ்நாடு

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம்: சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

top-news

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவல்துறையின் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

இன்றைய விவாதத்தின் போது, மாநிலத்தில் அண்மைக்காலமாக எழுந்துள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி அரசை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இன்றைய சட்டசபைக் கூட்டம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.