தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்ன?

top-news

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 21) பல்வேறு முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் நிறைவடைந்த பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட உள்ளன.

இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யின் பொறுப்பில் உள்ளது. எனவே, அந்தத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் வெளியிட வாய்ப்புள்ளது.