ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் (Productivity Linked Bonus - PLB) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் இந்த போனஸ் மூலம் பயனடைய உள்ளனர்.
இதையும் படிக்க: தொடர் சரிவில் தங்கம் விலை... நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்! இன்றைய நிலவரம் என்ன?
ஒவ்வொரு தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியருக்கும், அதிகபட்சமாக 78 நாட்களுக்குரிய ஊதியம் போனஸாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகையானது, வரவிருக்கும் தசரா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் ரயில்வே ஊழியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சுமார் 10 லட்சத்து 91 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக ஆயிரத்து 866 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


