நகைப்பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், இன்று ஒரு சவரனுக்கு கணிசமான அளவு குறைந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
நேற்று செப்டம்பர் 24ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,700க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.69,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் சொன்ன அந்த விஷயம்..!
கடந்த சில நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது, பண்டிகைக் காலத்திற்காக நகைகள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகப் பொருளாதாரச் சூழல் போன்ற காரணங்களே இந்த விலை மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


