இந்தியா

அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்! எக்ஸ் தளத்தில் வெளியிட்ட சிறப்புப் பதிவு!

top-news

சென்னை, அக்டோபர் 22: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவின் 62-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்து!

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் வாழ்த்து!

அமித்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் அமித்ஷாவின் நிர்வாகத் திறன் முக்கியப் பங்காற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் பாராட்டியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் கவனம்!

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து கவனம் பெற்றுள்ளது.