புதுடெல்லி, அக்டோபர் 21: டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில் 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே நையாண்டியாகப் பதிலளித்துள்ளார்.
ராவணனுடன் கரப்பான்பூச்சி உருவபொம்மை!
டெல்லி பீதாம்புராவில் ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி சார்பில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தில் ராவணன், கும்பகர்ணன், மேகநாத் உருவபொம்மைகளுடன் பிரம்மாண்ட கரப்பான்பூச்சி உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விழா அமைப்பாளர்கள் விளக்கமளித்தனர்.
‘இலவச விளம்பரத்திற்கு நன்றி!’
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அபிஜீத் திப்கே, ‘இலவச விளம்பரத்திற்கு நன்றி’ எனப் பதிவிட்டு நையாண்டி செய்தார்.
சிஜேபி சட்டப்பிரிவு தலைவர் ரத்னா சிங்கும் இதற்கு எதிர்வினையாற்றினார். உருவபொம்மை எரிப்பு, தங்கள் இயக்கத்தின் தாக்கத்தைக் காட்டுவதாக அவர் விமர்சித்தார்.
இதனிடையே, இந்த நிகழ்வுக்கு அரசியல் உள்நோக்கம் இல்லை என விழாக்குழுத் தலைவர் அசோக் கோயல் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் சிஜேபி போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த உருவபொம்மை எரிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.



.png)