இந்தியா

டெல்லியில் தடையை மீறி சிஜேபி மூவர்ணக் கொடி பேரணி: அபிஜீத் திப்கே, நேஹா போரா உட்பட 150-க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவல்!

top-news

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி போராட்டத்தின்போது பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் அக்டோபர் 16ஆம் தேதி பேரணி நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை, சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியது.

இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்கப் புறப்பட்ட திப்கேவை காவல்துறையினர் தடுப்புக் காவலில் அழைத்துச் சென்றனர். மாண்டி ஹவுஸ் பகுதியில் பேரணியாகச் சென்ற அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவும் தடுத்து வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தடையை மீறி தேசியக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் திரண்டனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய டெல்லியின் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.