மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த முக்கிய சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, 'பிரதமர்' (PM) பிராண்டிங்கின் கீழ் மறுபெயரிடப்பட்டுள்ளன.
பெயர் மாற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: முதியோர் ஓய்வூதியத் திட்டம்: 'இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்' இனி 'பிரதமர் வால்காவஸ்தா ஓய்வூதியத் திட்டம்' (Pradhan Mantri Vridhavastha Pension Yojana) என அழைக்கப்படும்.
விதவைகள் ஓய்வூதியத் திட்டம்: 'இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்' இனி 'பிரதமர் விதவா ஓய்வூதியத் திட்டம்' (Pradhan Mantri Vidhawa Pension Yojana) என மாற்றப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்: 'இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்' இனி 'பிரதமர் திவ்யாங்கஜன் ஓய்வூதியத் திட்டம்' (Pradhan Mantri Divyangjan Pension Yojana) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதர மாற்றங்கள்: தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) இனி 'பிரதமர் சமூக உதவித் திட்டம்' என்றும், தேசிய குடும்ப நலத் திட்டம் 'பிரதமர் குடும்ப லாபத் திட்டம்' என்றும் மாற்றப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் தகுதிக்கான குறைந்தபட்ச மாற்றுத்திறன் சதவீதம் 80 விழுக்காடிலிருந்து 40 விழுக்காமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.20 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.



.png)