பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் மைசூருவில் தசரா விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அப்போது, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களை விழாவுக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மைசூரு தசரா விழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விஜயதசமி நாளான அக்டோபர் 21-ம் தேதி பாரம்பரியமான ஜம்பூசவாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
தசரா என்பது கர்நாடக மக்களுக்கான விழா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் கலாசார விழாவாக அமைய வேண்டும் என கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களின் கலைக்குழுக்கள் மற்றும் அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவகுமார் விரைவில் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார் என மைசூரு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது



.png)