இந்தியா

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

top-news

புதுடெல்லி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தற்காலிகமாக நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை தாமாக ராஜினாமா செய்ததால் இரு தொகுதிகளும் காலியானதாகவும், இதனால் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் செலவுகள் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு மனு இறுதியாக விசாரிக்கப்படும் வரை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், மாற்றாக வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.