இந்தியா

“காந்தி இந்தியாவின் ஆன்மா; அம்பேத்கர் முதுகெலும்பு; நேரு சிந்தனை” - அபிஜித் திப்கே

top-news

புதுடெல்லி: மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரை இந்தியாவின் முக்கிய அரசியல் மற்றும் சமூக மரபின் தூண்களாகக் குறிப்பிட்டு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய அவர், மகாத்மா காந்தியை இந்தியாவின் “ஆன்மா” என்றும், அம்பேத்கரை “முதுகெலும்பு” என்றும், நேருவை இந்தியாவின் “சிந்தனை” என்றும் வர்ணித்தார். மேலும், இவர்களைப் போன்றவர்களாக தற்போதைய அரசியல் தலைவர்கள் மாற முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகவும் திப்கே தலைமையிலான கட்சி எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.