இந்தியா

காந்தி ஜெயந்தி: டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி

top-news

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்திலும் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை, எளிமை, துணிவு மற்றும் நாட்டுக்கான சேவை ஆகியவை தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், காந்தியின் கொள்கைகளும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது உறுதியும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சுதேசி பொருட்களை குறிப்பாக கதர் பொருட்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் 2-ம் தேதி குறைந்தபட்சம் ஒரு கதர் பொருளையாவது வாங்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.