இந்தியா

ரூ.2,000 வரை UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு!

top-news

புதுடெல்லி: ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் சிறிய தொகைக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கி அல்லது பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் விதிக்க முடியாது. RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட மின்னணு பரிவர்த்தனைகளுக்கும் இதேபோன்ற கட்டணத் தடை அமலில் உள்ளது.

அதேநேரத்தில், நபரிடமிருந்து நபருக்கு (P2P) மேற்கொள்ளப்படும் UPI பணப்பரிமாற்றங்கள் தொகை எவ்வளவு இருந்தாலும் இலவசமாகவே தொடரும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட நபரிடமிருந்து வணிகருக்கு (P2M) மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளில் அக்டோபர் 15, 2026 முதல் 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டணம் வணிகர்களை சார்ந்ததாக இருக்கும் என்றும், பொதுவாக வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய தொகை UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லாத நடைமுறை தொடர்வதன் மூலம், அன்றாட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.