இந்தியா

மன்னிப்பு கடிதம் கொடுத்து துப்பாக்கியை ஒப்படைக்கலாம்: கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!

top-news

பெங்களூரு: உரிமமில்லாத சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்துள்ளவர்கள் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றை ஒப்படைக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற தேசிய வன தியாகிகள் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முதலமைச்சர், வனப்பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உரிமமில்லாத துப்பாக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "வனவிலங்குகள் மற்றும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வைத்திருக்க விரும்புபவர்கள் முறைப்படி அரசு உரிமம் (Licence) பெற வேண்டும். சட்டவிரோதமாக உரிமமின்றி வைத்துள்ள துப்பாக்கிகளை நவம்பர் 1-ம் தேதிக்குள் சுய விருப்பத்தின் பேரில் மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்தால், அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது.

அவ்வாறு ஒப்படைப்பவர்கள் புதிய உரிமத்திற்கு விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு உரிமம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.