இந்தியா

குடமுழுக்கு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார் நித்யானந்தா? - பரப்பரப்பு தகவல்

top-news

புதுச்சேரி:  புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நித்யானந்தாவின் கைலாசா தியான பீடப் கிளையில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக (குடமுழுக்கு) விழாவில் நித்யானந்தா நேரடியாகக் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து கொண்டு இணையவழி மூலமாகவே தனது சீடர்களுக்கு உரையாற்றி வந்த நித்யானந்தா, தற்போது புதுச்சேரிக்கு நேரில் வரத் திட்டமிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த கும்பாபிஷேக விழாவிற்காக ஆசிரம வளாகத்தில் தூய்மைப் பணிகளும், விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், நித்யானந்தாவின் வருகை குறித்து பரவி வரும் தகவலால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.