இந்தியா

பெங்களூரு மும்பை, டெல்லியை மிஞ்சிய இந்திய நகரம்: சர்வதேச பட்டியலில் 17-வது இடம் பிடித்து சாதனை!

top-news

சென்னை:சர்வதேச பிரபல இதழான 'டைம் அவுட்' (Time Out) வெளியிட்ட உலகின் சிறந்த 20 இரவு நேரப் பொழுதுபோக்கு நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் பெங்களூரு நகரம் 17-வது இடத்தைப் பிடித்துப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.  

அளவுகோல்கள்: உலகெங்கிலும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்த 24,000-க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இரவு நேரப் பாதுகாப்புகள், பப் (Pub) கலாச்சாரம், உணவகங்கள், இசை நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் மக்களின் வரவேற்பு ஆகிய காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டன.  

ஏன் பெங்களூரு முதலிடம்?: 'இந்தியாவின் பப் தலைநகரம்' (Pub Capital of India) என அழைக்கப்படும் பெங்களூருவில் விதவிதமான உணவு வகைகள், நேரலை இசை நிகழ்ச்சிகள் (Live Music), மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இரவில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நேரத்தைச் செலவிடும் சூழல் அமைந்திருப்பதே மும்பை மற்றும் டெல்லியை விடப் பெங்களூரு முன்னிலை பெற முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  

பட்டியலில் உலக அளவில் முதலிடம் பிடித்த நகரங்கள்:

பாங்காக் (தாய்லாந்து)  பெர்லின் (ஜெர்மனி) 

நியூயார்க் (அமெரிக்கா)

ந்தியாவிலிருந்து மும்பை அல்லது டெல்லி இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு நகரம் 17-வது இடத்தைப் பிடித்து ஆச்சரியத்தையும் பெருமையையும் அளித்துள்ளது.