இந்தியா

“இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்”... தமிழக முதல்வர் விஜய்க்கு டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!

top-news

“தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.


செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், கர்நாடகத்தில் தற்போது உணர்ச்சிப்பூர்வமான சூழல் நிலவி வருவதாகவும், இதனால் தேவையற்ற பதற்றம் உருவாகாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், காவிரி மற்றும் மேகேதாட்டு அணை தொடர்பான பிரச்சினைகள் அரசியல் மேடையில் அல்ல, சட்டம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கர்நாடக அரசு தனது மாநிலத்தின் குடிநீர் தேவைகளையும், தமிழகத்தின் நீர் உரிமையையும் கருத்தில் கொண்டு சட்டத்தின் வரம்பிற்குள் செயல்படும் என்றும் டி.கே. சிவகுமார் கூறினார்.

இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து, காவிரி விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. தமிழக அரசு அல்லது முதல் அமைச்சர் விஜய் தரப்பில் இதற்கு அதிகாரப்பூர்வ பதில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.