சினிமா

டிக்கட் முன்பதிவில் அடித்து துவம்சம் செய்யும் 'கூலி' !

top-news



சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வெளியாகும் முன்பே டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை க்ரிஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். இசையை அனிருத் அமைத்துள்ளார். ‘கூலி’ படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

**முன்பதிவில் பெரும் வரவேற்பு**
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆனது. கேரளாவில் இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கவுன்டரில் டிக்கெட் பெறும் ரசிகர்கள் கூட்டம், திரையரங்குகள் முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

**சாதனை எண்கள்**
கேரளாவில் ஒரு மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. புக்மைஷோ தளத்தில் ஒரே நாளில் 3 லட்சத்து 76 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது. அதில் கேரளா மட்டும் ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில், ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு பிறகு, அதிகளவு முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது படமாக ‘கூலி’ பெயர் பெற்றுள்ளது.

ரசிகர்களின் இந்த வரவேற்பு, ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் மீது நிலவும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாகும்.