சென்னை, அக்டோபர் 22: பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர்!
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கிருஷ்ணராஜின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனித்துவமான குரல் வளத்தாலும் உற்சாகமான பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத பாடல்கள்!
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் அறிமுகமான கிருஷ்ணராஜ், 300-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
‘பொற்காலம்’ திரைப்படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘காதல் கோட்டை’ படத்தின் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘பருத்திவீரன்’ படத்தின் ‘அய்யயோ’ உள்ளிட்ட பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
அவரது இறுதிச் சடங்கு அக்டோபர் 23ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.png)

